N. Sethuraman The Best Epigraphist in India Award for the Year 1997

May 15, 1998 at Trissur, Kerala, India

The Epigraphical Society of India, in its 24th annual congress held in Trissur, in the state of Kerala, India, on May 15, 1998, awarded N. Sethuraman as the best epigraphist for the year 1997. The society also presented a copper plate scroll detailing his greatness and knowledge, the highest honor to be received by a research scholar.
Copper Plate Leaves 1 and 2
Copper Plate Leaf 3

 

Translation of the contents inscribed in the copper plate in Sanskrit

“இந்திய கல்வெட்டு ஆராய்ச்சி பரிஷத் (கழகம்)” கும்பகோணம் திரு. N. சேதுராமன் அவர்களை 1997-ஆம் ஆண்டின் சிறந்த கல்வெட்டு ஆய்வாளர் என்று கௌரவித்து அன்னாருக்கு வழங்கிய வடமொழிச் செப்பேட்டு  சாஸனத்தின் (செப்புப் பட்டயத்தின்) தமிழாக்கம் :

ஸித்தம் ! நலம் !!

பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்கு சாதனமான மாசற்ற  த்ருடபக்தி, சக்தி, ஞானம் இவைகளை அருளும் ஹே ! ராமபிரானே! தங்களையே தெய்வமாகக் கொண்டாடும் நான், தங்கள் புகழ்பாடி, போற்றி வணங்குகிறேன்.

இத்தகைய, நமது கலாசாரத்தின் விளக்கவல்ல கல்வெட்டு மற்றும் தொன்மைவாய்ந்த சாசனங்களை ஆராய்வதையே, கண்ணும் கருத்துமாகக் கொண்டு, இதையே தெய்வ வழிபாடாக எண்ணி சேவை புரியும் சேதுராமனாகிய தங்களை போற்றி வணங்குகிரேன்.

சுபமஸ்து! மங்களம் பொங்குக!!

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்புதய சாலிவாகன சகாப்தத்தில் நிகழும் 1920-ஆம் வருஷம் பஹுதான்யா நாம ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம், வசந்தருது, வைசாக மாதம், க்ருஷ்ணபக்ஷம், சதுர்த்தி சுபதிதியில், வெள்ளிக்கிழமையுடன் கூடிய இந்நாளில் (கி.பி. 15-5-1998)

மிகவும் பெருமைவாய்ந்த கேரள தேசத்தில், எம்பெருமான் ஸ்ரீ வடக்குநாத ஸ்வாமியின் திவ்ய கடாக்ஷத்தால் சிறந்து விளங்கும் “த்ரிசிவபுரம்” என்ற திருச்சூரில் நடைபெற்ற இந்திய கல்வெட்டு ஆராய்ச்சிக் கழகத்தின் 24ஆவது சமமேளனத்தில் இந்த பரிஷத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டதை மகிழ்ச்சியுடன் அனுசரித்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழி வித்தகரும், அறிஞர்களுடன் கூடியவரும், கும்பகோணம் சென்னை மற்றும் இங்கிலாந்து ஆகிய இடங்களில் கல்வி பயின்றவரும், குற்றமற்று இப்பல்கலைக்கழகங்களில் மேலான பட்டங்களை பெற்றவரும், கணிதம், அறிவியல் மற்றும் பொறியியலில் வல்லுனரும், தமிழ்நாட்டில் உள்ள ‘பல்லவராயன் பேட்டை’ எனும் கிராமத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ மீனாட்சி அம்மை உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருவருளால் வெகு விரைவில் பெற்ற  ஞானத்தால் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, அவற்றை விமர்சனம் செய்வதிலும் வல்லவரும், நமது பழமையான சாத்திர நூல்களில் தேர்ந்தவரும், மேலும் ஜோதிடம் மற்றும் வான இயலின் உதவியுடன் தமிழ்நாட்டில் பழைய, முற்கால, இடைக்கால அரசர்கள் பேரரசர்கள், சக்கரவர்த்திகள் காலம், சாம்ராஜ்யம், அவர்கள் ஆண்ட இடம் ஆகியவற்றை புதிய கோணத்தில் நிர்ணயித்தவரும், மிகவும் அபூர்வமான முறையில் பரிசோதித்து வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களுடன் பல நூல்களை வெளியிட்டவரும், பண்ப்பட்டவர்களுள் முதன்மையானவரும், பழமையான சாசனங்களையும், தமிழ் சிங்களம் முதலிய மொழிகளில் கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்வதில் நிபுணரும், இவ்வாறான பல சமேளனங்களில் தலைமை வசித்தவரும், பெரிய தொழிலதிபரும், நல்ல தோற்றமுள்ளவரும், தனது ஆராய்ச்சியில் நுண்ணிய பார்வை உடையவராயினும், பரந்த நோக்கம் கொண்டவரும், அத்வைத மதத்தில் பற்றுள்ளவராயினும், நன்முயற்சி, ஆராய்தல் இவற்றில் த்வைத்த பாவத்தை கடைப்பிடிப்பவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘கீழவிடயல்’ எனும் கிராமத்தில் பிறந்தவரும், ஸ்ரீ நாராயணன் ஸ்ரீமதி ஞானாம்பா இவர்களின் முத்தான புதல்வரும், சமூக சேவையில் சிறந்த பாக்யவதியான ஸ்ரீமதி லலிதாம்பாளின் கணவரும், கும்பகோணம் என்ற திருத்தலத்தில் வாழ்பவரும், இங்குள்ள ராமன் & ராமன் நிறுவனத்தின் இயக்குனராக விளங்குபவரும், காஷ்யப்ப கோத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம், யஜுஸ்ஸாகை இவைகளை சார்ந்தவரும், புண்யவான்களான தனது பெற்றோரால் சூட்டப்பெற்ற நற்பெயரை உடைய சேதுராமன் அவர்களுக்கு மிகவும் சிறப்பாக இவரால் மைகொள்ளப்பட்ட கல்வெட்டு, நாணயம், செப்பைட்டு சாசனங்கள் மற்றும் நூல்களில் பெருமுயற்சியுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் சேவைகளைப்பாராட்டி பல வித்துவான்கள், மஹா ஜனங்கள் இவர்களின் முன்னிலையில் பரிஷத்தின் முத்திரை பொருத்திய இந்த தாமரை பட்டயம் ஆதரவோடு வழங்கப்பெற்றது.

பழைய சாசனங்களை” செப்பனிட்ட தங்களுக்கு பழமையான ஸம்ஸ்க்ருத மொழியில் செய்யப்பட அபூர்வமான இந்த “சான்றிதழ்” அறிஞர்களுக்கு மகிழ்ச்சியய் அளிப்பதாக வழங்கப்படுகிறது.”

இந்த செப்புப் பட்டயம் பரிஷத்தின் (கழகத்தின்) கார்ய நிர்வாகியான பண்டித ஸ்ரீ ரமேஷா சர்மா அவர்கள் உத்தரவுப்படி புராதன சாசனங்களில் வல்லுனரும், பன்மொழி வித்தகரும், இந்திய அரசின் கல்வெட்டுத் துரையின் அதிகாரியுமான “கட்டீ” என்று பிரசித்தமாக அழைக்கப்பெறும் பண்டித நாரயணசார்யாரின் புதல்வரான பேராசிரியர் ஸ்ரீ மாதவசர்மா அவர்களால் எழுதப்பட்டு எழுத்து வல்லுனரான ஸ்ரீ வெங்கடாச்சாரி அவர்களால் பொறிக்கப் பெற்றது .”

சுபமஸ்து! நன்மை பெருகட்டும்!